பல்லடத்தில் மூத்த சந்தன மர வளர்ப்பாளர் திரு துரைசாமி ஐயா அவர்களின் சந்தன காட்டில் 15 -10- 2024 அன்று காவேரி கூக்குரல் அமைப்பால் நடத்தப்பட்ட சந்தன மர வளர்ப்பு சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு ஈசன் முருகசாமி அவர்களும், தற்போதைய தமிழ்நாடு சந்தனம் மற்றும் செம்மர விவசாயிகள் சங்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு விஜய்வின்சென்ட் அவர்களும் ஒரு வாட்ஸப் குழுவில் ஒருங்கிணைத்தனர்.
சங்கமாக நாம் உருவானதிலிருந்து சந்தனம் மற்றும் செம்மர வளர்ப்பு, நோய் மேலாண்மை சம்பந்தமான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
தமிழ்நாடு அளவில் உள்ள அனைத்து சந்தனம் & செம்மர விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக அவர்கள் வளர்க்கும் மரங்களின் தகவல்களை ஆவணப்படுத்துகிறோம் .
சந்தனம் | செம்மரம் | |
---|---|---|
மண் தன்மை | கிட்டத்தட்ட எல்லா மண் தன்மைகளையும் தாங்கி வளரும், ஆனாலும் செம்மண்/சரளை சிறந்தது. | செம்மண்/சரளை தேவை, மற்ற மண் வகைகளில் நடுவதை தவிர்க்கவும். |
நீர் தேவை | 2 - 3 ஆண்டுகள் குறைந்த அளவு நீர் தேவை, 4 -5 ஆண்டுகள் கோடை காலத்தில் மழை இல்லாதபோது, பாசனம் செய்து பராமரிக்கலாம்.பிறகு மானாவாரியாக வளர்க்கலாம். | முற்றிலும் மானாவாரியாக வளர்க்கலாம், மழை மிகவும் குறைவாக உள்ள இடங்களில் மட்டும் 2 - 3 ஆண்டுகள் பாசனம் தேவை. |
களை கட்டுப்பாடு | களை எடுக்க கூடாது, சந்தனம் களை செடிகளின் வேரில் சத்தினை உறிஞ்சும். சந்தன செடியின் உயரத்தை தாண்டி போட்டியிட்டு செல்லும் களைகளை மட்டும் அறுத்து விடலாம், ஆனால் வேரோடு பிடுங்கி எடுக்க கூடாது. களை கொல்லி உபயோகிக்க கூடாது. | முடிந்தால் ஓரிரு வருடங்கள் களை எடுக்கலாம், பிறகு தேவை இல்லை |
துணை செடி | சந்தனத்திற்கு துணை செடி தேவை, துணை செடி பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது | தேவை இல்லை |
கவாத்து | சந்தனம் தடி மர(timber) தேவைக்கு செல்வதில்லை, அதனால் முடிந்த அளவு கவாத்து செய்வதை தவிர்க்கவும், அப்படி செய்வதென்றால் ஒரே அளவில் போட்டியிட்டு செல்லும் கவை போன்ற குச்சிகளை மட்டும் வெட்டலாம், ஒரே நாளில் நிறைய கிளைகளை வெட்டினால் செடி அதிர்ச்சிக்குள்ளாகி வளர்ச்சி தடைபடும், அல்லது இறந்து கூட போகலாம். கால இடைவெளி விட்டு விட்டு ஓரிரு கிளைகளாக வெட்ட வேண்டும் . | அவசியம், செம்மரம் தடி மர தேவைக்கே பயன்படுகிறது, நீளமான நேரான அடிமரம் உருவாக்க வேண்டும். |
வடிகால் | நீர் தேங்கினால் மரம் இறந்து விடும், வடிகால் அவசியம். பொதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களில் நடுவதை தவிர்க்கவும். | நீர் தேங்கினால் மரம் இறந்து விடும், வடிகால் அவசியம். பொதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களில் நடுவதை தவிர்க்கவும். |
சந்தனம் ஒரு பகுதி நேர வேர் ஒட்டுண்ணி ஆகும். சந்தனம் தன் வாழ்நாள் முழுவதும் பிற தாவரங்களின் வேரில் இருந்தே நைட்ரஜன் மற்றும் பாஸ்பரோஸ் (தலை & மணி சத்து) உறிஞ்சும்.
பொதுவாக சந்தன மற்றும் செம்மரங்கள் தங்கள் நிலத்தில் நடவு செய்ய எந்தவித அனுமதியும் பெற வேண்டியது இல்லை. இருப்பினும் மரங்களை அறுவடை செய்யும் காலத்தில், வெட்டும் அனுமதி பெற, கிராம நிர்வாக அலுவலரை (VAO) தொடர்பு கொண்டு, அடங்கல் ஏற்றம் செய்ய வேண்டும். நடவு செய்த சில மாதங்களில் இதை செய்வது நன்று.
தற்போது வெட்டும் அனுமதி(cutting permit) வாங்கும் நடைமுறைகள் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. அதனை எளிதாக்க அரசாங்கத்தை வலியுறுத்துவதே நமது சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது உள்ள நடைமுறைப்படி(தமிழ்நாடு சந்தன மர பட்டா நிலங்கள் சட்டம் 2008), வெட்டும் அனுமதி வேண்டி மாவட்ட வன அலுவலருக்கு (DFO) தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், வனத்துறை மரங்களை வெட்டும். சந்தன மரமாக இருந்தால், வெட்டப்பட்ட மரங்கள் கிடங்கிற்கு (Depot ) அனுப்பப்படும், பிறகு ஏலம் விடப்பட்டு விவசாயிக்கு 80 % பணம் செலுத்தப்படும்.
365, அகத்தியன் வளகம்,
திருப்பூர் - பல்லடம் ரோடு,
திருப்பூர், தமிழ்நாடு 641604
Copyright © 2025. All Rights Reserved - Sandalwood. Designed & Maintained by Vaagai Technologies Pvt. Ltd.