⁠வளர்க்கும் தொழில்நுட்பங்கள்

சந்தனம் செம்மரம்
மண் தன்மை கிட்டத்தட்ட எல்லா மண் தன்மைகளையும் தாங்கி வளரும், ஆனாலும் செம்மண்/சரளை சிறந்தது. செம்மண்/சரளை தேவை, மற்ற மண் வகைகளில் நடுவதை தவிர்க்கவும்.
நீர் தேவை 2 - 3 ஆண்டுகள் குறைந்த அளவு நீர் தேவை, 4 -5 ஆண்டுகள் கோடை காலத்தில் மழை இல்லாதபோது, பாசனம் செய்து பராமரிக்கலாம்.பிறகு மானாவாரியாக வளர்க்கலாம். முற்றிலும் மானாவாரியாக வளர்க்கலாம், மழை மிகவும் குறைவாக உள்ள இடங்களில் மட்டும் 2 - 3 ஆண்டுகள் பாசனம் தேவை.
களை கட்டுப்பாடு களை எடுக்க கூடாது, சந்தனம் களை செடிகளின் வேரில் சத்தினை உறிஞ்சும். சந்தன செடியின் உயரத்தை தாண்டி போட்டியிட்டு செல்லும் களைகளை மட்டும் அறுத்து விடலாம், ஆனால் வேரோடு பிடுங்கி எடுக்க கூடாது. களை கொல்லி உபயோகிக்க கூடாது. முடிந்தால் ஓரிரு வருடங்கள் களை எடுக்கலாம், பிறகு தேவை இல்லை
துணை செடி சந்தனத்திற்கு துணை செடி தேவை, துணை செடி பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவை இல்லை
கவாத்து சந்தனம் தடி மர(timber) தேவைக்கு செல்வதில்லை, அதனால் முடிந்த அளவு கவாத்து செய்வதை தவிர்க்கவும், அப்படி செய்வதென்றால் ஒரே அளவில் போட்டியிட்டு செல்லும் கவை போன்ற குச்சிகளை மட்டும் வெட்டலாம், ஒரே நாளில் நிறைய கிளைகளை வெட்டினால் செடி அதிர்ச்சிக்குள்ளாகி வளர்ச்சி தடைபடும், அல்லது இறந்து கூட போகலாம். கால இடைவெளி விட்டு விட்டு ஓரிரு கிளைகளாக வெட்ட வேண்டும் . அவசியம், செம்மரம் தடி மர தேவைக்கே பயன்படுகிறது, நீளமான நேரான அடிமரம் உருவாக்க வேண்டும்.
வடிகால் நீர் தேங்கினால் மரம் இறந்து விடும், வடிகால் அவசியம். பொதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களில் நடுவதை தவிர்க்கவும். நீர் தேங்கினால் மரம் இறந்து விடும், வடிகால் அவசியம். பொதுவாக தண்ணீர் தேங்கும் இடங்களில் நடுவதை தவிர்க்கவும்.
  • 1. முதல் நிலை துணை

  சந்தன கன்று வரும் பாக்கெட்டில் பொன்னாங்கண்ணி கீரை வைத்தே விற்கப்படுகிறது, அது சிறிய கன்றுக்கு துணை செடியாக வேலை செய்கிறது. ஏதாவது செடிக்கு அருகில் கீரை இல்லை என்றால் நடவு செய்து வளர்க்கவும்.

  • 2. இரண்டாம் நிலை துணை

  சந்தன கன்று நடும்போதே அருகில் கிழக்கு மற்றும் மேற்குப்புறம் துவரையும் , வடக்கு மற்றும் தெற்குப்புறம் அகத்தி விதைகளை ஒரு அடி இடைவெளியில் நடவு செய்யவும். ஆறு மதம் வரை சந்தனம் பகுதி நிழல் விரும்பும், அதனால் அகத்தி மற்றும் துவரை செடிகளை ஓரளவு நிழல் அடிக்கும் அளவுக்கு விடலாம். ஆனால் 6 மாதத்திற்கு பிறகு, சிந்தனத்திற்கு நிழல் அடிக்காத அளவுக்கு, துணை செடிகளை கவாத்து செய்து விடவும்.

  • 3. மூன்றாம் நிலை துணை

  மேலே சொன்ன அகத்தி மற்றும் துவரை செடிகள் கவாத்து செய்ய செய்ய ஓரிரு ஆண்டுக்குள் இறந்து போகும். எனவே நிரந்தரமாக ஏதாவது ஒரு மரத்தை துணையாக நடவு செய்ய வேண்டும். அந்த மரம் தங்களின் வசதிக்கு தக்கவாறு தேர்வு செய்து கொள்ளலாம். பின்வரும் காரணிகள் கொண்டு நீங்கள் தேர்வு செய்யலாம்.

⁠சந்தனத்திற்க்கு இணையான வளர் இயல்பு
  • வறட்சி தாங்கும் தன்மை
  • வளரும் உயரம்
  • மர குடை (canopy) அளவு
துணை மரத்தின் பயன்பாடுகள்
  • கால்நடை தீவனம் (சீமை அகத்தி, சவுண்டால், சித்தகத்தி, குமிழ்,தீவன புற்கள், வேலிமசால்).
  • பட்டு புழு வளர்ப்பு - மல்பெரி.
  • தோட்டக்கலை மரங்கள் (கொடுக்காப்புளி,கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை, மா, நாவல்).
  • தடி(timber) மரங்கள் (தேக்கு, குமிழ், வேங்கை, செம்மரம், சிசு, ஈட்டி).

  துணை மரம் சந்தனத்திற்க்கு நிழல் தராதவாறு இடைவெளியை கூடுதலாக கொடுக்கவும். இடைவெளி அதிகமாக இருந்தாலும் ஓரிரு ஆண்டுகளில் சந்தன மரத்தின் வேர்கள் அதன் மரக்குடையை தாண்டி சென்று துணை மரத்தின் வேர்களை எட்டி பிடிக்கும் தன்மை கொண்டது. மானாவாரியாக வளர்க்கும் பட்சத்தில் அதற்ககு தக்க துணை மரத்தை தேர்வு செய்யலாம்.

  பொதுவாக சந்தனம் எல்லா தாவர வேர்களில் இருந்தும் சத்தை உறிஞ்ச முயற்சி செய்யும், அதனால் இயற்கையாக முளைக்கும் வேம்பு முதலிய மரங்களை வேருடன் பிடுங்க வேண்டாம். சநதனத்திற்கு நிழல் தராதவாறு கவாத்து செய்து கொள்ளவும். ஆனால் மரத்தின் தன்மைக்கு ஏற்ப சத்தை வழங்கும் அளவு மாறுபடும். உதாரணமாக வேம்பு மரம் நல்ல துணை செடி அல்ல, அது குறைந்த அளவே சத்தை பகிரும், அதே சமயத்தில் வேம்புடன் ஒட்டி இருக்கும் சந்தன மரங்கள் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்டதாக உள்ளது. ஆனால் கொடுக்காப்புளி நைட்ரஜனை நிலை நிறுத்தும் தன்மை கொண்டதால் அதிக அளவு சத்தை பகிரும். அதனால் பல வகையான மரங்கள் கலந்து இருப்பது நல்லது.