about thumb

சங்கத்தின் தோற்றம்

  பல்லடத்தில் மூத்த சந்தன மர வளர்ப்பாளர் திரு துரைசாமி ஐயா அவர்களின் சந்தன காட்டில் 15 -10- 2024 அன்று காவேரி கூக்குரல் அமைப்பால் நடத்தப்பட்ட சந்தன மர வளர்ப்பு சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு ஈசன் முருகசாமி அவர்களும், தற்போதைய தமிழ்நாடு சந்தனம் மற்றும் செம்மர விவசாயிகள் சங்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு விஜய்வின்சென்ட் அவர்களும் ஒரு வாட்ஸப் குழுவில் ஒருங்கிணைத்தனர்.

  அந்த குழுவில் அறிமுகமானவர்கள் 28-01-2024 அன்று திருப்பூரில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு சந்தனம் மற்றும் செம்மர விவசாயிகள் சங்கமாக உருப்பெற்றோம். மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் இணை அமைப்பாக செயல்படுவோம் என்றும் தீர்மானித்தோம்.

  அதே தேதியில் சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு சந்தன மற்றும் செம்மர விவசாயிகள் சார்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.