செயல்பாடுகள்⁠

  சங்கமாக நாம் உருவானதிலிருந்து சந்தனம் மற்றும் செம்மர வளர்ப்பு, நோய் மேலாண்மை சம்பந்தமான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

  தமிழ்நாடு அளவில் உள்ள அனைத்து சந்தனம் & செம்மர விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக அவர்கள் வளர்க்கும் மரங்களின் தகவல்களை ஆவணப்படுத்துகிறோம் . திருட்டு பிரச்சனையை சந்திக்கும் விவசாயிகளின் தகவல்களையும் ஆவணப்படுத்துகிறோம் மேலும் அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.அரசிடம் தங்கள் சந்தன மரங்களை விற்க விரும்பும் விவசாயிகளுக்கு அதற்கான தகவல்களையும் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறோம்.

  விவசாயிகளுக்கு ஆண்டு வருமானம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சந்தன விதைகளுக்கு என்று ஒரு சந்தையை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளோம். சந்தன விதைகளை சில பயன்பாடுகளுக்காக விலைக்கு வாங்கிக்கொள்கிறோம்.